×

கணவருடன் பிரச்ன: காதலில் தோற்பது பழகிவிட்டது - வனிதா விளக்கம்

நடிகை வனிதா விஜயகுமார், தனது 3வது கணவர் பீட்டர் பாலுடன் கருத்து வேறுபாடுகள் காரணமாக, சண்டை போட்டு பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி வனிதா டிவிட்டரில் நேற்று வெளியிட்ட அறிக்கை: எனது வாழ்க்கை தொடர் போராட்டமாக இருந்து வந்துள்ளது. இது எனக்குப் புதிதல்ல. காதலில் தோற்பது எனக்குப் பழகிவிட்டது. ஆனால் நான் எப்போதுமே அதைக் கடந்து வந்திருக்கிறேன், இன்னும் வலிமையுடன் வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கிறேன்.

காதலில் இருப்பதும், அதனால் ஏமாற்றமடைவதும் துன்பகரமானது, தாங்க முடியாத வலியைத் தரக்கூடியாது. ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு நமக்கு எல்லாம் மரத்துப் போய்விடும். நம் கண் முன் நம் வாழ்க்கையை இழப்பது மிகுந்த வலியை தரும் விஷயம்.

என் வாழ்க்கையில் எனக்கிருந்த அத்தனை கனவுகளும் நம்பிக்கையும் நொறுங்கிப் போகலாம் என்ற சூழலில் நான் தற்போது இருக்கிறேன். நான் நேர்மறையாக இருக்கிறேன். ஆனாலும் சமாதானம் அடையவில்லை. ஏனென்றால் அது எனக்கு இன்னும் அச்சத்தை தருகிறது. எனது வாழ்க்கையில் இந்த கட்டத்தில் நான் யாருக்கும், வேறதையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இது என் வாழ்க்கை, நான் மட்டுமே இதை கையாள முடியும். நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இது நடந்துவிட்டது. எனது குழந்தைகளையும், என்னை சுற்றியிருப்பவர்களையும் மனதில் வைத்து சரியான முடிவினை எடுப்பேன். இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Tags : Vanitha ,
× RELATED கடன் பிரச்சனையில் தவித்ததால் மனைவி சேலையில் தூக்கிட்டு கணவன் பரிதாப சாவு