×

3வது கணவரை பிரிகிறார் வனிதா?

நடிகை வனிதா விஜயகுமார் தனது முதல் இரண்டு கணவர்களை விவாகரத்து செய்து விட்ட நிலையில் நடன இயக்குனர் ராபர்ட் உடன் லிவ்விங் டு கெதராக வாழ்ந்து வந்தார். பின்னர் அவரையும் பிரிந்து 3வதாக பீட்டர் பால் என்பரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு இவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது.

இந்த நிலையில் வனிதா தனது 40வது பிறந்த நாளை கொண்டாட குடும்பத்துடன் கோவாவுக்கு சென்றார். அங்கு கணவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் கோவாவில் குடிபோதையில் தன்னிடம் பிரச்னை செய்த பீட்டர் பாலை வனிதா அடித்து துரத்தியதாக நேற்று தகவல்கள் பரவியது. இதனை தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் தனது டிவிட்டரில் உறுதிபடுத்தி இருக்கிறார். ‘ஆமாம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அனைவரின் பேச்சும் உண்மையாகி விட்டது. வீட்டில் இருந்து துரத்தி விடப்பட்டார் பிபி (பீட்டர் பால்)’ என்று குறிப்பிட்டிருக்கிறார். முதல் மனைவியை கைவிட்டு இரண்டாவது திருமணம் செய்த பீட்டர் பாலையும், வனிதாவையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர் இவர்.

தன்னை பற்றிய தகவல்களுக்கு உடனடியாக பதில் அளிக்கும் வனிதா இந்த தகவல்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. இது பற்றி தகவல் அறிய அவரை தொடர்பு கொண்டபோது அவரது போன் அவுட் ஆப் சர்வீஸ் என வந்தது.

Tags : Vanitha ,
× RELATED கடன் பிரச்சனையில் தவித்ததால் மனைவி சேலையில் தூக்கிட்டு கணவன் பரிதாப சாவு