×

என்னை கொல்ல சதி: பாயல் கோஷ் புகார்

நடிகை பாயல் கோஷ் திடீரென இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறினார். 7 வருடங்களுக்கு முன்பு அவர் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அனுராக் காஷ்யப்பிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனக்கு அனுராக் காஷ்யப்பின் அடியாட்களிடமிருந்து மிரட்டல் வருவதாகவும் கங்கனா ரனவத்துக்கு அளிக்கப்பட்டது போன்று தனக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார் பாயல் கோஷ். இந்த நிலையில் தனது டிவிட்டரில், தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் தன்னை கொலை செய்து விட்டு அதை தற்கொலை போன்று காட்டி விடுவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். அனுராக் காஷ்யப் செல்வாக்கு மிக்கவர் என்பதால், போலீசார் அவரை கைது செய்ய தயக்கம் காட்டுகிறார்கள். அவரை கைது செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு பாயல் கோஷ் கடிதம் எழுதி உள்ளார்.

Tags : Payal Ghosh ,
× RELATED பலாத்கார புகார் செய்த நடிகை பாயல் கோஷ் அதாவலே கட்சியில் இணைந்தார்