தரமற்ற உற்பத்தி நான்கு தேயிலை தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ்-தேயிலை வாரியம் அதிரடி

குன்னூர் : நீலகிரியில் தேயிலையின் தரம், தொழிற்சாலையின் சுகாதாரம்,விவசாயிகளுக்கு ஆன்லைன் பணப்பரிமாற்றம் பதிவுகள்  உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்றாத நான்கு தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு இந்திய தேயிலை வாரியம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.நீலகிரி மாவட்டத்தல் தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த நான்கு தொழிற்சாலைகளின் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி தென்னிந்திய தேயிலை வாரியம்  நடடிக்கை எடுத்துள்ளது.தரமற்ற தேயிலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளால், தென்னிந்திய தேயிலைக்கு விலை குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து,  இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம்  குன்னூர்,கோத்தகிரி,கூடலூர், மற்றும் ஊட்டி  உள்ளிட்ட பகுதிகளில் தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்‌.மேற்கண்ட ஆய்வுகளின் போது  இலைகளின் தரம்,சுகாதாரத்தை  சரியான பதிவுகளை பராமரித்தல்,  விவசாயிகளுக்கு ஆன்லைன் கட்டணம்  ஆய்விற்குப்பிறகு கவனிக்கப்பட்ட முறைகேடுகளுக்காக 4  தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.  அதே போல் அனைத்து தொழிற்சாலைகளும் இடைத் தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு நேரிடையாக வங்கி மூலம் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது….

The post தரமற்ற உற்பத்தி நான்கு தேயிலை தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ்-தேயிலை வாரியம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: