×

மீண்டும் வருகிறார் தன்யா

விஜய் சேதுபதியுடன் கருப்பன், அருள்நிதியுடன் பிருந்தாவனம் படங்களில் நடித்தவர் தன்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி. கவர்ச்சியாக நடிக்க மறுத்ததால் சில பட வாய்ப்புகளை இவர் இழந்தார். இதனால் தொடர்ந்து படங்கள் இல்லாமல் இருந்தார். இந்நிலையில் இவர் மீண்டும் நடிக்க திரும்பியிருக்கிறார். அதுவும் ஹீரோயினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொண்ட கதையில் நடிக்கப்போகிறார். சசிகுமார், லட்சுமி மேனன் நடிப்பில் சுந்தரபாண்டியன் படத்தை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அதையடுத்து உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிப்பில் இது கதிர்வேலன் காதல் படத்தை இயக்கினார். மூன்றாவதாக விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் ஜோடி சேர்ந்த சத்ரியன் படம் இயக்கி இருந்தார். இந்நிலையில் இவர் முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதை ஒன்றை எழுதியுள்ளார். இதில்தான் தன்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Tags : Tanya ,
× RELATED பெண்களின் கேரக்டர்கள் வலிமையாக இருக்கும்: ‘ரணம்’ பற்றி வைபவ்