×

கவர்ச்சிக்கு நோ சொல்லும் ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஸ்ரீதிவ்யா. தொடர்ந்து ஜீவா, வெள்ளக்காரதுரை, காக்கி சட்டை, இஞ்சி இடுப்பழகி, காஷ்மோரா, சங்கிலி புங்கிலி கதவ தொற உள்ளிட்ட படங்களில் நடித்தார். லாக்டவுன் சமயத்தில் ஹீரோயின்கள் முழு மேக்அப் உடன் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களையும் யோகா செய்யும் புகைப்படங்களையும் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அவர்களிலிருந்து வித்தியாசப்படுகிறார் ஸ்ரீதிவ்யா. முற்றிலும் மேக்அப் இல்லாமல், பாவாடை தாவணியில் போட்டோக்களை எடுத்து அதை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது. இதற்கு காரணம், இந்த புகைப்படங்களில் ஸ்ரீதிவ்யா யதார்த்தமாக இருக்கிறார் என ரசிகர்கள் புகழ்கிறார்கள். அத்துடன் எந்த காரணத்துக்காகவும் தான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என இந்த புகைப்படங்கள் மூலம் அவர் சுட்டிக் காட்டியிருப்பதாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகின்றனர். இப்போது அதர்வா ஜோடியாக ஒத்தைக்கு ஒத்த படத்தில் ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். மேலும் 2 படங்களில் நடிக்க கதைகளை கேட்டு வருகிறாராம்.

Tags : Sreedivya ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!