×

ஸ்ரேயா வெளியிட்ட லிப்லாக்

காதல் கணவர் ஆண்ட்ரி கோச்சீவ்வுடன் ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் ஸ்ரேயா, தமிழில் நரகாசூரன், சண்டக்காரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில், கதையில் கனமான கேரக்டர் இருந்தால், ஹீரோயினாக மட்டும் இல்லாமல், முக்கிய வேடத்திலும் நடிக்க தயார் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், தனது கணவரின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடிய அவர், நெருக்கமான போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது வழக்கமான ஒன்று என்றாலும், கணவருக்கு லிப்லாக் கொடுக்கும் போட்டோவையும் பதிவு செய்துள்ளார். இதற்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்தாலும், இதுபோல் படங்களில் நடிக்க மறுப்பது ஏன் என்று ஸ்ரேயாவுக்கு கேள்விக்கணை தொடுத்துள்ளனர்.

Tags : Shreya ,
× RELATED ரூ.400 கோடி பட்ஜெட்டில் 5 படங்களை இயக்கும் சந்துரு