×

இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு கொரோனா

இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா உள்பட பல தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னட படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். அவருக்கு வயது 88.  கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு லேசான காய்ச்சல், ஜலதோஷம் இருந்தது. பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதுபற்றி சிங்கீதம் சீனிவாசராவ் கூறும்போது, ‘லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நுரையீரலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன். டாக்டர் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்’ என்றார்.

Tags : Corona ,Singitam Srinivasa Rao ,
× RELATED கொரோனா தாக்கம் குறைந்தது எப்படி?