×

பாலிவுட் பற்றி அதிதி ராவ்

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையை தொடர்ந்து, பாலிவுட்டில் போதை பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுகுறித்து அதிதி ராவ் ஹைதரி கூறுகையில், ‘இன்றில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும். சினிமாவில் மட்டுமின்றி, எல்லா துறையிலும் தவறு நடக்காமல் இல்லை. மற்றவர்களைப் போல் நாங்களும் சாதாரண மனிதர்கள்தான். எங்களிடமும் தவறுகளும், தோல்விகளும் நிறைந்துள்ளது.

பாலிவுட்டில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மிகவும் நேர்மையாக இருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்கிறோம். எனக்கு ஏதாவது பிரச்னை என்றால், ஓடி வந்து உதவி செய்ய பலர் இருக்கின்றனர். நான் வெளியாள் என்றாலும் அவர்கள் எனக்கு உதவுகின்றனர். பலமான குடும்பப் பின்னணி இல்லாதவர்களுக்கு திரையுலகம் கடினமாக இருப்பது உண்மைதான். இது எல்லா துறையிலும் இருக்கும்போது, ஏன் சினிமாவை மட்டும் பிரித்து பார்க்க வேண்டும்?’ என்றார்.

Tags : Aditi Rao ,
× RELATED பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம்...