×

மிஷ்கின் இயக்கத்தில் ஸ்ருதி

கடைசியாக சைக்கோ படத்தை இயக்கினார் மிஷ்கின். இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்க அவர் ஒப்பந்தமாகி இருந்தார். சில காட்சிகளை லண்டனிலும் படமாக்கினார். அதன் பிறகு விஷால், மிஷ்கின் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த படத்திலிருந்து மிஷ்கின் நீக்கப்பட்டார். இப்போது சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்க அவர் கதை எழுதி வருகிறார். இதில் ஹீரோயினாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் மிஷ்கின் பேசியுள்ளாராம். தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் மட்டும் ஸ்ருதி நடித்து வருகிறார். இதனால் மிஷ்கின் படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

Tags : Sruthi ,Mishkin ,
× RELATED ஜெயம் ரவியின் ஜீனி செகண்ட்லுக் வெளியீடு