இது உங்களுக்காக மகேஷ் பாபு....! சவாலை ஏற்ற தளபதி விஜய்

தெலுங்கு திரையுலகில் #GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் மூவருக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டும். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபு, “எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது.

இந்த #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்குவிடுக்கிறேன். இந்தச் சங்கிலி எல்லைகளைக் கடந்து தொடரட்டும். இதற்கு நீங்கள் எல்லாரும் ஆதரவு அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

தான் மரக்கன்று நடும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு,  ‘இது உங்களுக்காக மகேஷ் பாபு. பசுமை இந்தியாவுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

Related Stories: