×

சுனு லட்சுமி வேதனை

கோபி நயினார் இயக்கிய அறம் படத்தில் நயன்தாராவுடன் நடித்தவர், மலையாள நடிகை சுனு லட்சுமி. ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள அவர், இப்போது  சங்கத்தலைவன் என்ற படத்தில் கருணாஸ் மனைவி வேடத்தில் நடித்திருக்கிறார். இதுபற்றி கேட்டதற்கு பதிலளித்த சுனு லட்சுமி, ‘நான் தமிழில் நடிக்க வந்து பத்து வருடங்களாகி விட்டது. 

ஆனால், என்னை நம்பி பெரிய பட வாய்ப்புகள்  கொடுப்பதில்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நடிக்க வந்த இத்தனை  ஆண்டுகளில் அறம் படத்தில் மட்டுமே நான் அதிகமாக கவனிக்கப்பட்டேன். என் நிலையை  நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது’ என்றார்.

Tags : Chunu Lakshmi ,
× RELATED சிறகன் விமர்சனம்