×

பெரிய ஹீரோயின்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: வரலட்சுமி

வரலட்சுமி நடித்துள்ள டேனி படம் இணையதளத்தில் வெளியாகிறது. இதனை ஒளிப்பதிவாளர் முத்தையா தயாரித்துள்ளார், புதுமுகம் சந்தானமூர்த்தி இயக்கி உள்ளார். இது குறித்து வரலட்சுமி கூறியதாவது: இது ஒரு துப்பறியும் கிரைம் த்ரில்லர் கதை. நான் இதில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறேன். தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கொலை ஒன்றை பயிற்சி பெற்ற மோப்ப நாய் டேனியின் உதவியுடன் துப்பறியும் கதை. என்னை பொறுத்தவரை எப்போதுமே ஸ்கிரிப்ட்தான் ஹீரோ. அதனால்தான் நாயின் பெயரை தலைப்பாக கொண்ட படத்தில் நடித்திருக்கிறேன். காரணம் இந்த படத்தில் அந்த நாய்தான் ஹீரோ. 

படம் இணையதளத்தில் வெளியாகிறது. தியேட்டர் அனுபவத்தை இழக்கிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் மாற்றத்தை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். கொரோனா பிரச்னையால் சம்பளத்தை குறைப்பீர்களா? என்று கேட்கிறார்கள். இந்த கேள்வியை பெரிய ஹீரோயின்களிடம்தான் கேட்க வேண்டும். அவர்கள்தான் குறைக்க வேண்டும். நான் ஏற்கெனவே சம்பளத்தை குறைத்துதான் வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

Tags : heroines ,Varalakshmi ,
× RELATED சபரிமலையில் வருமானம் மிகவும்...