×

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காஜல் அகர்வால் பட ஷூட்டிங் ரத்து

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐதராபாத்தில் நடைபெற இருந்த காஜல் அகர்வால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. காஜல் அகர்வால் இந்தியில் நடிக்கும் படம் மும்பை சாகா. இந்த படத்தில் ஜான் ஆப்ரஹாம், இம்ரான் ஹாஷ்மி ஹீரோக்களாக நடிக்கிறார்கள். சஞ்சய் குப்தா இயக்குகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்புகளை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மேற்கொள்ள தெலங்கானா அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மும்பை சாகா இந்தி படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஜூலை 16ம் தேதி முதல் 15 நாட்கள் நடத்த படக்குழு முடிவு செய்தது. 

இதில் காஜல் அகர்வாலுடன் மேலும் சில நடிகர்கள், டெக்னீஷியன்கள் எனது மொத்தம் 35 பேர் மட்டும் பங்கேற்பது என திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் நாட்டில் ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மும்பை சாகா படக்குழு அதிர்ச்சி அடைந்தது. காஜல் அகர்வால் உள்பட நடிகர், நடிகைகளிடம் பேசியதில் அவர்களும் படப்பிடிப்புக்கு வர தயக்கம் காட்டினர். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார்.

Tags : Kajal Agarwal ,photo shoot ,
× RELATED நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம்