×

வெப்சீரிஸில் நடிக்கிறார் சூர்யா

முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்க உள்ளார் சூர்யா. திரைப்படங்களுக்கு இணையாக வெப்சீரிஸ் தயாரிப்பதும் அதிகரித்து வருகிறது. சினிமா இயக்குனர்கள் பலர் வெப்சீரிஸ் இயக்குவதில் பிசியாகிவிட்டனர். நடிகர், நடிகைகளும் இதில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வெப்சீரிஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள ஆதரவு காரணமாகவே இதற்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னமும் வெப்சீரிஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளார். 9 பகுதிகளாக இந்த வெப்சீரிஸ் தயாராக உள்ளது. இதில் 9 கதைகள் இடம்பெறும். ஒரு வெப்சீரிஸில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்த தொடருக்கு நவரசா என தலைப்பிட்டுள்ளனர். ஜெயந்திரா இயக்குகிறார். இவர் சித்தார்த், பிரியா ஆனந்த் நடித்த 180 படத்தை இயக்கியவர். மற்ற 8 பகுதிகளை 8 இயக்குனர்கள் தனித்தனியே இயக்க உள்ளனர். நடிகர்கள் அரவிந்த் சாமி, சித்தார்த் ஆகியோரும் ஒவ்வொரு பகுதிகளை இயக்க உள்ளனர்.

Tags : Surya ,
× RELATED மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு அரசியல் கட்சிகளுக்கு சூர்யா நன்றி