×

அவதூறான பேச்சால் மன உளைச்சல் வனிதா விஜயகுமார் கண்ணீர் பேட்டி

சென்னை: சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி அவதூறாக பேசுவதுடன், வீட்டிற்கு வந்து தாக்கிவிடுவதாக மிரட்டுவதாக சூர்யாதேவி என்பவர் மீது நடிகை வனிதா விஜயகுமார் போரூர் போலீசில் மீண்டும் புகார் செய்துள்ளார். நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்நிலையில் சூர்யாதேவி என்பவர் யூடியூபில் தன்னைப் பற்றி அவதூறாக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருவதாக போரூர் போலீசில் இரண்டாவது முறையாக வனிதா நேற்று புகார் செய்தார்.  அதன் பிறகு நடிகை வனிதா கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம்  கூறியதாவது: சூர்யாதேவி என்பவர் என்னைப் பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும், பொய்யான தகவல்களை யூடியூப்பில் பதிவிட்டு வருகிறார். 

இது குறித்து ஏற்கனவே போரூர் போலீசில் புகார் செய்திருந்தேன். சூர்யாதேவியுடன் தயாரிப்பாளர் ரவீந்திரன் என்பவர் சேர்ந்து கொண்டு அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்கள் இருவருக்கும் தொடர்பு உள்ளது.  இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் என்னுடைய குழந்தைகள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். எனக்கு 40 வயது ஆகிறது. என் வாழ்க்கைக்கு துணை வேண்டும் என்பதால் முறைப்படி வெளிப்படையாக திருமணம் செய்து கொண்டுள்ளேன். எனக்கு தற்போது யாரும் ஆதரவாக இல்லை என்பதால் என்னை குறி வைத்து இருவரும் என் மீது அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் மீது 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 

கஞ்சாவியாபாரி அவதூறு பேச்சு
இதையடுத்து வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதர் கூறியதாவது: சூர்யாதேவி கஞ்சா விற்பனை செய்பவர். கஞ்சா விற்பனையை பாதுகாப்பாக நடத்துவதற்காக இது போன்ற செயல்களில் சூர்யா தேவி ஈடுபட்டு வருகின்றார். அவருக்கும் தனியார் டிவி ஷோவில் பங்கேற்கும் நடிகர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது. கஞ்சா விற்பனைக்காக அவர் பேசும் ஆடியோக்களை போலீசில் கொடுத்துள்ளோம். பப்ளிசிட்டிக்காக அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vanitha Vijayakumar ,interview ,speech ,
× RELATED அனைத்து மாணவர்களுக்கும் இலவச...