×

இயக்குனர் பாலா நடிக்காத மர்மம்

பாலா இயக்கத்தில் பிதாமகன் படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தவர் சங்கீதா. அவர் ேகட்ட கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்து இருந்தார் பாலா. அந்த பேட்டியில் பாலா கூறுகையில், ‘இதுவரை நான் இயக்கிய படங்களில் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்த நடிகை பூஜா என்றுதான் சொல்வேன். நான் கடவுள் படத்தில் அவருக்கு கண் தெரியாது. அதற்காக லென்ஸ் அணிந்திருப்பார். அதை அணிந்து நடிக்கும்போது, உண்மையிலேயே கண் தெரியாது. அப்படிப்பட்ட நிலையில், மலை மீது அவர் ஓடி வருவது போன்ற காட்சியை படமாக்கியபோது, நான் மைக்கில் லெப்ட், ரைட் என்று மட்டும் சொல்வேன். அதைக்கேட்டு அவர் ஓடி வர வேண்டும். 

ஒருவேளை நான் மாற்றிச் சொல்லிவிட்டால் அவ்வளவுதான், அதல பாதாளத்தில் விழுந்து காணாமல் போக வேண்டியதுதான். இப்படி தன் உயிரை பணயம் வைத்து நடித்த பூஜாதான் என்னை பெரிதும் கவர்ந்த நடிகை’ என்று சொன்னார். ஹீரோக்களை பற்றி கேட்கும்போது, நழுவி விட்டார். விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, அதர்வா, சசிகுமார் போன்றோரை ஒவ்வொரு விஷயத்தில் தனக்கு பிடிக்கும் என்று சொன்ன பாலா, எல்லோரையும் நடிக்க வைக்கும் நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கக்கூடாது என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, ‘ஊகூம், என்னால நடிகர்கள் மாதிரி பல்டி எல்லாம் அடிக்க முடியாது’ என்றார்.

Tags : Bala ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே அடுத்தடுத்து 4...