ஜெனிலியா உடல் தானம்

குறுகிய காலத்தில் தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர், ஜெனிலியா. 2012ல் பாலிவுட் ஹீரோ ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து, நடிப்புக்கு தற்காலிக முழுக்கு போட்டுவிட்டு, இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். இந்நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ள அவர் சமீபத்தில் செய்த ஒரு செயல், ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதாவது ஜெனிலியாவும், அவரது கணவர் ரிதேஷ் தேஷ்முக்கும் இணைந்து தங்கள் உடல்களை தானம் செய்வதாகவும், கண்களை தானம் செய்வதாகவும் அதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளதை அறிவித்துள்ளனர். கோலிவுட்டில் கமல்ஹாசன், திரிஷா,  பார்த்திபன், சீதா, லைலா போன்றவர்கள் உடல் தானம் மற்றும் கண் தானம் செய்துள்ளனர். ரஜினிகாந்த், மீனா, சினேகா போன்றோர் கண் தானம் செய்துள்ளனர். டோலிவுட்டில் சிரஞ்சீவி, பாலிவுட்டில் சல்மான்கான், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா போன்றோர் உடல் தானம் மற்றும் கண் தானம் செய்துள்ளனர்.

Related Stories: