×

இளையராஜாவிடம் ரஜினி கேட்ட பாடல்

1991ல் ரஜினி, கவுதமி நடிப்பில் ராஜசேகர் இயக்கிய தர்மதுரை படத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். அப்போது தன்னிடம் ரஜினி கேட்ட ஒரு விஷயத்தை அவர் பகிர்ந்துகொண்டார். ‘ரஜினி தான் நடிக்க வேண்டிய ஒரு பாட்டுக்கான சிச்சுவேஷனை சொல்லிவிட்டு, அந்த பாட்டு மாதிரி எனக்கு வேண்டும் என்று கேட்டார். அது நான் இசை அமைத்து, கமல் நடிப்பில் வெளியான இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இடம்பெற்ற ‘தண்ணி கருத்திருச்சி’ என்ற பாடல். அதுதான் நான் ஏற்கனவே இசை அமைத்துவிட்டேனே. உங்களுக்கு புதிதாக ஒரு பாட்டு தருகிறேன் என்று சொல்லி இசை அமைத்த பாட்டுதான், 1991ல் வெளியான தர்மதுரை படத்தில் இடம்பெற்ற ‘மாசி மாசம் ஆளான பொண்ணு’ என்ற பாடல்’ என்ற தகவலை சொன்னார் இளையராஜா.

Tags : Rajini ,Ilayaraja ,
× RELATED சீட் பெல்ட் போடாததால் ரஜினிக்கு ரூ100 அபராதம்