×

சக்ராவுக்கும், இரும்புத்திரைக்கும் சம்பந்தம் இல்லை...! டைரக்டர் விளக்கம்

விஷால் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் சக்ரா. இதில் விஷாலுடன் ஸ்ரத்தா நாத், கே.ஆர்.விஜயா, சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை பார்த்த பலரும் இதில் இரும்புத்திரை படத்தின் சாயல் இருப்பதாக கூறினார்கள்.

இதுகுறித்து படத்தை இயக்கி இருக்கும்  எம்.எஸ்.ஆனந்தன் கூறியதாவது: சைபர் க்ரைம் பற்றிய படம்தான், என்றாலும் இரும்புத்திரைக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. அதுமட்டுமல்ல இந்த படத்தின் ஒரு காட்சி கூட வேறெந்த படத்திலும்  இடம் பெற்றிருக்காது.  விஷால் ராணுவ அதிகாரியாகவும், ஸ்ரத்தா போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். இதில் குடும்ப சென்டிமெண்டுக்கும் முக்கியத்துவம் இருக்கும் என்கிறார்.

Tags : Chakra ,
× RELATED தேசிய கல்விக் கொள்கையில்...