அஞ்சலியின் திடீர் மாற்றம்

தற்போது இணையதளங்களில் அஞ்சலியின் தோற்றம் வைரலாகி வருகிறது. தலைமுடியை குட்டையாக ‘கட்’ செய்து, மூக்குக்கண்ணாடி அணிந்து வித்தியாசமாக காட்சி அளிக்கிறார். போட்டோக்களுக்கு மேற்புறம் வெளியிட்டுள்ள வாசகத்தில், ‘ஒரு பெண் திடீரென்று தனது தலைமுடியை கட் செய்தால், தன் வாழ்க்கை முறையை புதிய வழியில் மாற்றிக்கொள்ளப் போகிறாள் என்று அர்த்தம்’ என்று பதிவு செய்து இருக்கிறார். இது பிரெஞ்சு பேஷன் டிசைனர் ஒருவருடைய வாசகம். அஞ்சலி சினிமாவில் நடிக்க வந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்தது. தெலுங்கில் நிசப்தம், வக்கீல் சாப், ஆனந்த பைரவி, பாலகிருஷ்ணா படம் மற்றும் தமிழில் ஒ, காண்பது பொய், பிக் பாஸ் ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், திருமண வதந்திகளில் இருந்து தப்பித்துவிட்டார். 

தற்போது ஐதராபாத்தில் இருக்கும் சொந்த வீட்டில் தனது தாயாருடன் வசித்து வரும் அவர், லாக்டவுனில் சமையல் செய்வது, வீட்டை அழகுபடுத்துவது, உடற்பயிற்சிகள் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டார். இந்நிலையில், திடீரென்று இதுபோன்ற வாசகத்தை அவர் பதிவு செய்திருப்பது, சொந்த வாழ்க்கையில் அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதாகவே இருக்கும் என்று, அவருக்கு நெருக்கமான சில தோழிகள் கூறுகின்றனர்.

Related Stories: