×

தலைநகரம் 2ம் பாகம்

கடந்த வருடம் சுந்தர்.சி ஹீரோவாக நடித்து வி.இசட்.துரை இயக்கிய இருட்டு படம் வெளியானது. தற்போது இயக்குனர் அமீர் ஹீரோவாக நடிக்கும் நாற்காலி என்ற படத்தை இயக்கி வருகிறார், துரை. இதைதொடர்ந்து மீண்டும் சுந்தர்.சி நடிப்பில் இருட்டு 2ம் பாகம் இயக்க அவர் முடிவு செய்திருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு  விட்டது. ஏற்கனவே  சுந்தர்.சிக்காக வேறொரு கதையை தயார் செய்திருந்த அவர், சுந்தர்.சி நடித்து ஹிட்டான தலைநகரம் படத்தின் 2வது பாகமாக அதை உருவாக்கி இருந்தார். ஆனால், இப்படத்துக்காக சுந்தர்.சி 2 மாதங்களுக்கு மேல் தாடி வளர்க்க வேண்டும் என்பதால் திட்டத்தை தள்ளிவைத்திருந்தார். 

லாக்டவுன் காலக்கட்டத்தில் இருக்கும் சுந்தர்.சி, 3 மாதங்களாக தாடி வளர்த்து வருகிறார். யதேச்சையாக இப்படியொரு வாய்ப்பு அமைந்ததால், ஊரடங்கு  முடிவுக்கு வந்ததும் சுந்தர்.சியை வைத்து தலைநகரம் 2 படத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளனர். தலைநகரம் முதல் பாகத்தில் வடிவேலுவின் காமெடி மிகப்பெரிய ஹைலைட்டாக இருந்ததால், 2ம் பாகத்திலும் வடிவேலுவையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Tags :
× RELATED கொரோனா, காற்று மாசு, கடும்...