×

ஒரே படத்தில் சூர்யா, கார்த்தி?

மலையாளத்தில் வெளியான படம், அய்யப்பனும் கோஷியும். திரைக்கதை ஆசிரியர் சச்சி இயக்கி இருந்த இதில் பிஜூ மேனன், பிருத்விராஜ் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் வாங்கியுள்ளார். இதில் முதலில் சரத்குமார், சசிகுமார் இணைந்து நடிப்பதாகவும், பிறகு சசிகுமார், ஆர்யா சேர்ந்து நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், சசிகுமார் நடிப்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரீமேக்கில் முதல்முறையாக சூர்யா, கார்த்தி இணைந்து நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, "இந்தப் படத்தின் ரீமேக் தொடர்பாக சூர்யா, கார்த்தி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடக்கவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது.

Tags : Surya ,Karthi ,
× RELATED கைவிடப்பட்டதா சூர்யா படம்?