×

காக்க காக்க 2: ஜோதிகா தகவல்

கடந்த 2003ல் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன் நடிப்பில் வெளியான படம், காக்க காக்க. இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இதன் 2ம் பாகம் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியானது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, "காக்க காக்க 2ம் பாகம் கண்டிப்பாக உருவாகும். அதற்கான கதையுடன் கவுதம் மேனன் வந்தால், நடிப்பதற்கு தயாராகவே இருக்கிறோம்" என்று பதிலளித்தார். பாலா இயக்கத்தில் நாச்சியார் 2ம் பாகம் குறித்து இன்னொரு ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன ஜோதிகா, "பாலாவிடம் நாச்சியார் 2ம் பாகத்துக்கான கதையை உடனே எழுத சொல்கிறேன்" என்றார், புன்னகைத்தபடி.

Tags :
× RELATED சிறகன் விமர்சனம்