×

குடியிருப்புவாசிக்கு கொரோனா தனிமைப்படுத்திக் கொண்ட பிந்து மாதவி

கழுகு, தேசிங்கு ராஜா, சவாலே சமாளி, பசங்க 2, ஜாக்சன் துரை உள்பட பல படங் களில் நடித்தவர், பிந்து மாதவி. தற்போது மாயன், யாருக்கும் அஞ்சேல் ஆகிய படங்களில் நடிக்கிறார். தெலுங்கு படங் களிலும் நடித்து வருகிறார்.சென்னையிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் அவரது குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த குடியிருப்பு பகுதியை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தடை செய்யப்பட்டுள்ள பகுதியாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து பிந்து மாதவி கூறும்போது, ‘என்னுடைய குடியிருப்பில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, எங்கள் கட்டிடத்தில் வசித்து வரும்  அனைவரும் அடுத்த 14 நாட்களுக்கு சுய தனிமை யில்  இருக்கப் போகிறோம்’ என்றுதெரிவித்தார்.

Tags : Bindu Madhavi ,resident ,
× RELATED அதிமுக செய்தி தொடர்பாளர் அண்ணாதுரைக்கு கொரோனா உறுதி