×

மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் சூர்யா

தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம், பொன்மகள் வந்தாள். கடந்த வெள்ளிக்கிழமை ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பிரட்ரிக் இயக்கியுள்ள இப்படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் நடித்துள்ளனர். படத்தில் நேர்மையான வழக்கறிஞரான ஜோதிகா, குழந்தைகளைக் கொன்று புதைத்ததாக கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட பெண்ணுக்காக வழக்கு தொடர்வார். குற்றவாளிக்கு ஆதரவாக வழக்கு தொடுப்பதா என்று பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தும். அப்படி நடத்தும் அமைப்பு களில் ஒன்றாக இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் சித்தரிக்கப்பட்டு இருந்தது.இதற்கு அந்த அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டனர். 

இதையடுத்து படத்தின் இயக்குனர் பிரட்ரிக் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் மாதர் சங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக்குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறெந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக நாங்கள் தார்மீக மன்னிப்பு கேட்டு, மாதர் சங்கத்தின் பெயர் மற்றும் லோகோவை உடனடியாக நீக்குவதற்கு உறுதி அளிக்கிறோம். இவ்வாறு பிரட்ரிக் தெரிவித்துள்ளார்.

Tags : Surya ,Mather Association ,
× RELATED பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு...