கொரோனா சோகம்: 16 ஏக்கரில் போடப்பட்ட செட் இடித்து தரைமட்டம்

முன்னாள் கால்பந்து வீரர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையப்படுத்தி பாலிவுட்டில் உருவாகி வரும் படம், மைதான். இதில் அஜய் தேவ் கன், பிரியாமணி, கஜராஜ் ராவ் உள்பட பலர் நடிக்கின்றனர். அமித் ரவீந்திரநாத் இயக்குகிறார். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்புக்காக மும்பை புறநகரில், 16 ஏக்கர் பரப்பளவில் பெரிய கால்பந்து மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் செட்டுகளாக போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவில்லை. இதனால், போடப்பட்ட செட்டுகளை கடந்த 3 மாதங்களாக பராமரிக்க தயாரிப்பு தரப்பு பல லட்ச ரூபாய் செலவு செய்தது. தற்போது அவற்றைப் பராமரிக்க முடியாததாலும், தற்போது படப்பிடிப்பு நடக்கும் சூழல் இல்லாதநிலையிலும் அந்த செட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். எனவே, தயாரிப்பு தரப்புக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: