×

சினி பிட்ஸ்

* மீண்டும் அஜித்தை இயக்குவதற்காக கதை எழுதி வைத்துள்ள விஷ்ணுவர்தன், தற்போது ஷேர்ஷா என்ற இந்திப் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்ட பதிவில், “சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்குகள் இயங்கி வருகிறது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நான் இல்லை. டிவிட்டரில் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
* கொரோனா லாக்டவுனில் பியானோ வாசிப்பதில் அடுத்த நிலையை கற்றுக்கொண்டார், ஸ்ருதிஹாசன். அதுபோல், கிடார் வாசிக்க கற்றுக்கொண்டார் ராசி கன்னா. இருவருமே நடிப்பை தொடர்ந்து பின்னணி பாடுவதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விரைவில் தனி பாடல் 
ஆல்பம் வெளியிட ராசி கன்னா முடிவு செய்துள்ளார்.
* கடந்த ஆண்டு டாக்டர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்ட இயக்குனர் ஏ.எல்.விஜய், நேற்று ஆண் குழந்தைக்கு தந்தை ஆனார். ஐஸ்வர்யா விஜய்க்கும் நேற்றுதான் பிறந்தநாள்.
* நியூசிலாந்து நாட்டில் தனது மனைவி, மகன், மகளுடன் குடியேறி இருக்கும் அப்பாஸ், அங்கு ஒரு நிறுவனத்தில் 
பணியாற்றி வருகிறார். அதனால்தான் மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு வந்த அழைப்புகளை அவர் ஏற்கவில்லையாம்.
* வெளிநாட்டில் தன் குடும்பத்தினருடன் வசிக்கும் ஈரமான ரோஜாவே படத்தின் ஹீரோயின் மோகினி, மீண்டும் சினிமா மற்றும் டி.வி தொடரில் நடிக்க விரும்பி, தனது உடல் எடையை கடுமையான உடற்பயிற்சி மூலம் குறைத்து வருகிறார்.
* தமிழ் திரையுலகில் நடிக்க வருவதற்கு முன், சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் வாசலில் நின்றுகொண்டு, குறிப்பிட்ட பொருளை வாங்க வருபவர்களுக்கு அதுபற்றி விளக்கமாக சொல்லி, ஒரு சாக்லெட் கொடுத்து வரவேற்கும் வேலை பார்த்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதற்கு அவர் வாங்கிய மாதாந்திர சம்பளம் 225 ரூபாய் மட்டுமே.
* படம் இயக்குவதை நிறுத்தி வைத்துள்ள சசிகுமார், தற்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறார். கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நா நா, பரமகுரு, எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், அடுத்து முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிக்கிறார். அதோடு, சரித்திரக்கதை இயக்க முடிவு செய்து, விஜய்யிடம் சென்று கால்ஷீட் கேட்டுள்ளார்.
* தற்போது டாக்டர், அயலான் ஆகிய படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து அட்லி உதவியாளர் அசோக் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் இரட்டை வேடத்தில் நடிப்பதால், ஏற்கனவே ரஜினிமுருகன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இரட்டை வேடத்தில் தோன்றிய சிவகார்த்திகேயனின் சாயல் இருக்கக்கூடாது என்ற விஷயத்தில் அசோக் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
* பார்ப்பதற்கு மறைந்த நடிகை ஷோபா சாயலில் இருக்கும் இயக்குனர் ஹலீதா ஷமீமுக்கு சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். சமுத்திரக்கனியும் அவரது இயக்கத்தில் நடிக்கும்படி கேட்டாராம். இயக்குவது மட்டுமே தனது குறிக்கோள் என்று சொல்லிவிட்டாராம் ஹலீதா ஷமீம்.
* வெற்றிமாறனுக்கு நடிக்க அழைப்புகள் வந்தும் அவற்றை நிராகரித்து விட்டார். பாலு மகேந்திராவிடம் பணியாற்றிய போது அவர் நடிக்கச் சொன்னாராம். அதை மறுத்த வெற்றிமாறன், எப்போதும் சினிமாவில் நடிக்கக்கூடாது என்ற விஷயத்தில் உறுதியாக இருக்கிறாராம்.
* கே.பாலசந்தர் இயக்கத்தில் நடிக்காதது பற்றி ராதிகா கூறுகையில், “இணைந்து பணிபுரிவது பற்றி சிலமுறை பேசியிருக்கிறோம். இதுவரை நான் நடிக்காத கேரக்டராக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஆனால், கடைசிவரை அவரது இயக்கத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து வருத்தமாக இருக்கிறது” என்றார்.
* மீம்ஸ் கிரியேட்டர்கள் அதிகம் பயன்படுத்துவது வடிவேலு நடித்த கேரக்டர்கள் சம்பந்தப்பட்ட போட்டோக்களைத்தான். இதுகுறித்து ஒரு ரசிகர், “மீம்ஸ் கிரியேட்டர்ஸ் தலைவர் வடிவேலு” என்று குறிப்பிட்டதற்கு பதிலளித்த விவேக், “உண்மை. வடிவேலுவை போல் மீம் கிரியேட்டருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை. வாழ்க அவர் நகைச்சுவைப் பணி” என்று பாராட்டியுள்ளார்.
* மாஸ்டர் படத்தின் டிரைலரை பிரத்தியேகமாக பார்த்துவிட்ட மாளவிகா மோகனன், “ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்த்த டிரைலரிலும், இப்போது பார்த்த டிரைலரிலும் பல வித்தியாசங்களும், இன்ப அதிர்ச்சிகளும் காத்திருந்தது. மெய்
சிலிர்த்தபடி ஒவ்வொரு ஷாட்டையும் பார்த்து பிரமித்தேன். இதைவிட பல மடங்கு பரவசமான அனுபவம் ரசிகர்களுக்கு கிடைக்கப் போகிறது” என்று சொன்னார்.
* லாக்டவுனில் கிடைத்துள்ள ஓய்வு நேரத்தில் அசத்தலான ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதியுள்ள சூரி, அதில் தன்னுடைய மகன் மற்றும் மகளை நடிக்க வைத்து குறும்படம் உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
* அசுரன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் நடிப்பை புகழ்ந்த பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், விஜய் நடித்த பிகில் படத்தை பார்த்துவிட்டு, ‘மசாலா சினிமாவின் மாயக்காரர் அட்லி’ என்று இயக்குனர் அட்லி பற்றி கமெண்ட் செய்துள்ளார். இவர்தான் இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்க இருக்கும் படத்தை ஷாரூக்கானுடன் இணைந்து தயாரிக்க உள்ளார்.

Tags :
× RELATED சினி பிட்ஸ்