×

இசை நிறுவனம் தொடங்கினார் ஐசரி கணேஷ்

 

 

சென்னை: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஐசரி கே. கணேஷ், “வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்” எனும் புதிய இசை நிறுவனத்தை தனது பிறந்த நாளில் துவக்கியுள்ளார். இதன் மூலம், திரைப்பட தயாரிப்பு, இசை, திரையரங்குகள், போஸ்ட் புரொடக்சன் மற்றும் ஸ்டூடியோ வசதிகள் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் இணைத்து தர உள்ளார். இதன் துவக்க நிகழ்ச்சியில் கோலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

 

ஐசரி கே. கணேஷ் கூறும்போது, ‘‘தமிழ்த் திறமைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் தளமாக ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ உருவாகியுள்ளது’’ என்றார். ஏ.ஆர். ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி, சித்து குமார், கோவிந்த் வசந்தா, ஷான் ரோல்டன் ஆகிய பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து புது தலைமுறை தமிழ் இசை திறமைகளை உருவாக்கவிருக்கிறது.

 

 

Tags : Isari Ganesh ,Chennai ,Isari K. Ganesh ,Vels Film International Limited ,Vels Music International ,Kollywood ,
× RELATED முனீஷ்காந்த் மனைவி வேடத்தில் விஜயலட்சுமி