தமிழ் சினிமாவில் திருட்டு விசிடி, திருட்டு கதை, திருட்டு பாடல் என பல பிரச்னைகள் உண்டு. படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் பாடல்கள், காட்சிகள் இணையதளங்களில் வெளியாவது உண்டு. சமீபகாலமாக ஒரு படம் அறிவிக்கப்பட்ட உடனே அல்லது அறிவிப்பதற்கு முன்பே ரசிகர்களே படத்தின் போஸ்டர் டிசைன் செய்து வெளியிட்டு விடுவார்கள். இதற்கு ஃபேன் மேட் போஸ்டர் என்று தனியாக பெயரே வைத்து விட்டார்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் புதிதாக ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. ஃபேன் மேட் போஸ்டர் போன்று ரசிகர்களே தணிக்கை சான்றிதழ் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள்.