×

விஜய் பட போலி தணிக்கை சான்றிதழ் வெளியீடு

தமிழ்  சினிமாவில் திருட்டு விசிடி, திருட்டு கதை, திருட்டு பாடல் என பல  பிரச்னைகள் உண்டு. படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் பாடல்கள்,  காட்சிகள் இணையதளங்களில் வெளியாவது உண்டு. சமீபகாலமாக ஒரு படம்  அறிவிக்கப்பட்ட உடனே அல்லது அறிவிப்பதற்கு முன்பே ரசிகர்களே படத்தின்  போஸ்டர் டிசைன் செய்து வெளியிட்டு விடுவார்கள். இதற்கு ஃபேன் மேட் போஸ்டர்  என்று தனியாக பெயரே வைத்து விட்டார்கள். கொரோனா ஊரடங்கு  காலத்தில் புதிதாக ஒன்று அறிமுகமாகியிருக்கிறது. ஃபேன் மேட் போஸ்டர் போன்று  ரசிகர்களே தணிக்கை சான்றிதழ் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

அதன்படி  அவர்கள் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ்  இயக்கும் மாஸ்டர் படத்தின் தணிக்கை சான்றிதழையே தயாரித்து  வெளியிட்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் படத்திற்கு யுஏ சான்றிதழ்  கொடுத்திருக்கிறார்கள். இந்த சான்றிதழ் கடந்த 21ம் தேதி  வழங்கப்பட்டதாகவும். படத்தின் நீளம் 181.நிமிடங்கள் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சான்றிதழ் போலியானது என்றும் அறிவித்துள்ளனர்.

Tags : Vijay Image ,
× RELATED என்எல்சியில் தொடர் பாய்லர் விபத்து விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு