×

விண்ணை தாண்டி வருவாயா 2-ம் பாகம் தயாராகிறது

கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணைதாண்டி வருவாயா படம் கடந்த 2010ம் ஆண்டு வெளியானது. தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. இதில் சிம்பு, த்ரிஷா நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். 2ம் பாகத்தின் முன்னோட்டமாக கவுதம் வாசுதேவ மேனன் கார்த்திக் டயல் செய்த எண் என்று குறும்படத்தை கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கி உள்ளார்.

இதில் சிம்பு, த்ரிஷா நடித்துள்ளனர், ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். கவுதம் மேனன் இயக்கி உள்ள துருவ நட்சத்திரம், ஜோஸ்வா: இமை போல் காக்க படங்களும், தயாரித்த நரகாசுரன் படமும் வெளிவர வேண்டியது இருக்கிறது.

Tags : sky ,
× RELATED த்ரிஷ்யம் 2ம் பாகம்: மோகன்லால் தீவிரம்