×

சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி

கமல்ஹாசன் தயாரிக்கும் தலைவன் இருக்கிறான் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தின் பிரமோசனுக்காக இருவரும் இணைய தளத்தில் கலந்துரையாடி வருகிறார்கள். இதில் விஜய் சேதுபதி கூறிய ஒரு கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய்சேதுபதி, “சாமிகளை குளிக்க வைக்கும்போது (அபிஷேகம்) காட்டுகிறார்கள். உடை மாற்றும்போது காட்டுவதில்லையே ஏன்?” என்று கேட்டு அவர் சர்ச்சையில் சிக்கி கொண்டிருக்கிறார். இவருக்கும் கடும் எதிர்ப்புகள் உருவாகி உள்ளது. விஜய்சேதுபதி தொடர்ந்து இந்த மத உணர்வுகளை இழிவுபடுத்தி வருகிறார் என்று இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

Tags : Vijay Sethupathi ,
× RELATED 200 பேர் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி