×

உதவி செய்வதை விமர்சனம் செய்வதா?...விஜய் தேவரகொண்டா ஆவேசம்

கடந்த சில நாட்களுக்கு முன் தனது அறக்கட்டளை மூலம் கொரோனா பாதிப்புகளுக்கு நிதியுதவி அளித்த நடிகர் விஜய் தேவரகோண்டா, நியாயமான உதவி தேவைப்படுபவர்கள் தனது இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் சொல்லியிருந்தார். இதற்காக விருப்பம் உள்ளவர்கள் நன்கொடை தரலாம் என்று அறிவித்தார். அதன்படி சில நாட்களில் சுமார் 70 லட்சம் ரூபாய் நன்கொடை சேர்ந்தது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டா பற்றி தெலுங்கு இணையதளத்தில் தவறான கருத்து வெளியானது. நன்கொடை எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதனால் ஆவேசம் அடைந்த அவர், வீடியோ வெளியிட்டு பேசியதாவது: எனது நன்கொடைகளை பற்றி கேள்வி கேட்க நீங்கள் யார்? இது உழைத்து சம்பாதித்த பணம். என் விருப்பப்படி அவற்றை வழங்குகிறேன். எங்களது மற்றும் திரைத்துறையின் விளம்பரங்களால் சில இணையதளங்கள் வாழ்கின்றன. இரு நாட்களுக்கு முன்பு நான் பேட்டி தர மறுத்ததால் எதிர்மறை செய்திகள் வருகின்றன. மக்கள் இதுபோன்ற போலிகளை நம்பாமல், ஊடக தர்மத்தின் அடிப்படையில் செயல்படும் நேர்மையான ஊடகங்களை நம்புங்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Tags : Vijay Deverakonda ,
× RELATED உதவி செய்வதை விமர்சனம் செய்வதா? விஜய் தேவரகொண்டா ஆவேசம்