×

தமன் இசையில் தளபதி 65...மிரட்டும் கூட்டணி

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் தனது 65 வது படத்தில் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் துப்பாக்கி 2ம் பாகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என சமீபத்தில் தகவல் பரவியது. மேலும் தமன் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என கூறப்பட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய்யை தமன் சந்தித்தபோது விரைவில் இணைந்து பணியாற்றலாம் என விஜய் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது தமன் ஒரு தெலுங்கு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை உறுதி செய்துள்ளார். ஆம். விஜய் படத்திற்கு இசையமைக்கிறேன். அதற்காக மிக உற்சாகமாக இருக்கிறேன். கடந்த மூன்று வருடமாக இதற்காக பாலோ அப் இருந்தது. தற்போது தான் சரியான நேரம் வந்துள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது" என தமன் பதில் அளித்துள்ளார்.

Tags : Commander ,Allied Alliance ,
× RELATED போருக்கு தயார் ஆகுங்கள்.. சீன ராணுவ...