×

கனடாவில் இருக்கும் மகன் சஞ்சய் பற்றி விஜய்யிடம் நலம் விசாரித்தார் அஜித்...!

சென்னை: கனடாவில் தங்கியுள்ள நடிகர் விஜய்யின் மகன் பற்றி நலம் விசாரித்தார் நடிகர் அஜித். விஜய் மகன் சஞ்சய், படிப்பை முடித்துவிட்டு, குறும்படங்கள் இயக்கி வந்தார். இந்நிலையில், சினிமா தொடர்பான படிப்புக்காக அவர் கனடாவுக்கு சென்றார். இதற்கிடையே கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் கனடாவில் இருந்து சஞ்சய் நாடு திரும்ப முடியவில்லை. இதை நினைத்து விஜய் கவலை அடைந்தார். தினமும் மகனிடம் பேசி அவைர தனிமையில் இருக்குமாறும், வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவு றுத்தி வருகிறார்.

இந்த தகவல் மீடியாவில் பரவியதும் இதுபற்றி அஜித் அறிந்துள்ளார். உடனே விஜய் யிடம் செல்போனில் பேசிய அஜித், ‘சஞ்சய் எப்படி இருக்கிறான்? கனடாவில் இன்று சூழல் எப்படி இருக்கிறது’ என்பதாக கேட்டுள்ளார். ‘சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறான். பயப்படும்படியாக எதுவும் இல்லை’ என்று விஜய் கூறினாராம். இதுபோல் அவ்வப்போது விஜய்க்கு போன் செய்து அஜித் பேசுவது வழக்கமானது என்று, அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

Tags : Ajith ,Sanjay ,Vijay ,Canada ,
× RELATED ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர்...