நகைச்சுவை நடிகர் புலம்பல்

ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் உளள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருப்பவர் பால சரவணன். அவர் கோபத்தில் திட்டி தீர்த்திருக்கிறார். ‘கொரோனாவை விட மனிதன் ஆபத்தானவன். 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் சானிடைசர் தீர்ந்துவிட்டதால் அதை வாங்க கடைக்கு சென்றேன். 60 ரூபாய் மதிப்புள்ள சானிடைசரை 135 ரூபாய் என்றார்கள். ஏன் விலையை ஏற்றிச் சொல்கிறீர்கள் என்றதற்கு ‘நான் என்ன பண்ணமுடியும்.

Advertising
Advertising

நான் இங்கு வேலைதான் பார்க்கிறேன்’ என கூறினார். பின்னர் காபி சாப்பிட ஒரு கடைக்கு சென்றபோது அங்கிருந்த பெண்ணும் சானிடைசரை அதிக விலைக்கு விற்பதாக தெரிவித்தார். எங்களைப்போலவே பலரும் புலம்புகின்றனர். அவசரகாலத்தில் இலவசமாக தர வேண்டிய பொருட்களை விலையை உயர்த்தி லாபத்திற்கு விற்பது சரியில்லை’ என தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Related Stories: