×

வெங்கட் பிரபுக்கு காசு கொட்டுது

கொரோனா வைரஸ் குறித்து மெசேஜ் வெளியிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு, ‘நம் வீட்டில் ஒருவருக்கு வந்தாதான் நாம் ஒழுக்கம் கடைபிடிப்போம்னா அது ரொம்ப தப்பு. சென்னைல எல்லோரும் வெளியதான் சுத்துறோம். நமக்கு வர சான்ஸே இல்லனு. வேண்டாம் ப்ளீஸ், தயவு செஞ்சு வீட்ல இருங்க. உங்களுக்காக இல்லனாலும் நம்ம நேசிக்கிறவங்களுக்காக வித் லவ் கொரோனா என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதில்கேள்வி கேட்ட ரசிகர் ஒருவர்,’தலைவா உங்களுக்கு காசு கொட்டுது.

நாங்க அப்படியா சொல்லுங்க. பெர்மனன்ட் ஜாப் இல்ல. வரலனா ஜாப் இல்லனு சொல்றாங்க. என்ன தலைவா பண்றது’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த வெங்கட்பிரபு, ‘பெர்மனன்ட் ஜாப்பா? எங்களுக்கா? என் படம் ரிலீஸ் ஆகி மூன்றரை வருஷம் ஆகுது. எங்களுக்குதான் அதிகம் கணிக்க முடியாத வாழ்க்கை. பாதுகாப்பாக இருங்கள்’ என தெரிவித்துள்ளார்.

Tags : Venkat ,
× RELATED திருப்பூரில் பட்டப்பகலில் பயங்கரம்...