×

மும்பை பாடகரை மணந்தார் அமலாபால்; மணக்கோலத்தில் லிப் டு லிப் முத்தம்

நடிகை அமலாபால், இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து மணந்தார். 2 வருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார் அமலாபால். ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் அமலாபாலுக்கும் பாலிவுட் பாடகர் பவிந்தர் சிங்கிற்கும் காதல் மலர்ந்தது.

கடந்த ஒரு வருடமாக இருவரும் ரகசியமாக சந்தித்து டேட்டிங் செய்தனர். சமீபத்தில் இவர்களின் காதல் வெளிவுலகத்துக்கு தெரிய வந்தது. சில தினங்களுக்கு முன் அமலாபாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப் படங்களை பவிந்தர் சிங் வெளியிட்டார். இந்நிலையில் நேற்று இருவரும் பாரம்பரிய முறைப்படி ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

இந்த விழாவில் நெருக்கமான உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். திருமண படத்தை பவிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் சிறிது நேரத்திலேயே அவற்றை நீக்கிவிட்டார். திருமண கோலத்தில் இருவரும் லிப் டு லிப் முத்தம் பகிர்ந்த புகைப்படமும் அதில் இடம்பெற்றிருந்தது. வழக்கமாக இன்ஸ்டாவில் தீவரமாக புகைப்படங்களை வெளியிடும் அமலாபாலும் மறுமண புகைப்படங்களை வெளியிடவில்லை.

Tags : Amalapal ,singer ,Mumbai ,wedding ,
× RELATED பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை...