×

கலாச்சாரம் பேசி வம்பில் சிக்கிய பிரணிதா

பிரணிதாவை ஞாபகம் இருக்கிறதா? உதயன் படத்தின் மூலம் அறிமுகமான பிரணிதா, சகுனி, மாஸ் படத்தில் நடித்திருப்பதுடன் கடைசியாக ஜெமினிகணேசனும் சுருளி ராஜனும் படத்தில் நடித்தார். கடந்த 3 வருடமாக புதிய தமிழ் படம் எதுவும் நடிக்க வில்லை. பெங்களூரில் ரெஸ்டாரன்ட் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். திடீரென்று பிரணிதாவுக்கு அரசியலில் குதிக்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதற்கு கொரேனாவை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
 
இதுபற்றி அவர் கூறும்போது, ’சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக இருந்தது. இந்தியாவில் 10 லட்சத்தில் ஒருவருக்குதான் இந்த அறிகுறி தெரிந்திருக்கிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அதற்கு காரணம் இந்து கலாச்சாரம், பழக்க வழக்கம் இதில் முக்கிய பங்கு வகிப்பதுதான். கைகுலுக்கிக்கொள்வதற்கு பதில் கைகூப்பி வணக்கம் சொல்வது, மிருகங்களை வணங்குவது, சைவ உணவை சாப்பிடு வது போன்றவைதான்.

ஆனால் அவற்றை கேலி செய்வதுபோல் சிலர் இன்றைக்கு சிரிக்கிறார்கள். இந்து கலாச்சாரம்தான் மக்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றி யிருக்கிறது’ என்றார். பிரணிதாவின் இந்த பேட்டியை கண்டு சிலர், நீங்கள் சீக்கிரம் அரசியலில் குதிக்கப் போகிறீர்களா? நீங்கள் சொல்லும் சுத்தம் மற்ற மதங்களில் இல்லையா? என்று கேட்டு வருகின்றனர்.

Tags :
× RELATED பழமையும், பன்முகத் தன்மையும் இந்திய கலாசாரத்தின் அடிநாதம்.: கமல்ஹாசன்