×

ரிலீஸ் படங்கள் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி

விக்ரம் பிரபு நடித்த அசுரகுரு, சிபி நடித்த வால்டர், ஹரிஸ் கல்யாண் நடித்த தாராள பிரபு, புதுமுகங்கள் நடித்த கயிறு போன்ற சில படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்று பிக்கப் ஆகி வந்த நிலையில் கொரோனோ பீதியால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் அப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

இப்போதுதான் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூல் அதிகரித்த நிலையில் அப்படியே படத்தை நிறுத்திவிட்டதால் 100 ரூபாய் கூட வருமானம் இல்லாமலாகி விட்டது. எனவே மீண்டும் தியேட்டர்களை திறக்கும்போது தற்போது நிறுத்தப்பட்ட படங்களை தொடர்ந்து திரையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். நடிகர் ஹரிஸ் கல்யாண் கூறும்போது, ‘தாராள பிரபு படத்தை ரீ ரிலீஸ் செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : release ,
× RELATED பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு