×

காஜலை கலங்க வைத்த கொரோனா

நடிகை காஜல் அகர்வால் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். படப் பிடிப்பில் ஏற்பட்ட விபத்தை நேரில் பார்த்ததிலிருந்து பயத்திலேயே இருக்கிறார் காஜல். இதற்கிடையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் தினச் சம்பளக்காரர்கள் படும் கஷ்டத்தை நேரில் கண்டு கலங்கியிருக்கிறார்.
இதுகுறித்து காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில்,’வாடகை கார் ஓட்டுனர் ஒருவர் என் முன்னால் வருத்தமுடன் நின்று கொண்டிருந்தார்.

அவரிடம் விசாரித்தபோது கடந்த 48 மணி நேரத்தில் நீங்கள் ஒருவர்தான் இன்றைக்கு கஸ்டமர். வீட்டில் என் மனைவி சமையல் செய்வதற்காக காத்துக்கொண்டிருப்பாள். நீங்கள் தரும் கார் வாடகை பணத்தை கொண்டு போய் தந்தால்தான் இன்றைக்கு சமைக்க முடியும். மேலும் ஒரு வாடிக் கையாளரை பிடிப்பதற்காக 70 கி.மீ தூரம் காரை ஓட்டி வந்ததாக அந்த டிரைவர் தெரிவித்தார்.

அதைக்கேட்டு கலங்கிவிட்டேன். தினச் சம்பளக் காரர்களும் அவர்களது குடும்பமும் கொரோனா வைரஸ் காரணமாக எந்த வேலையும் இல்லாததால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு முடிந்த உதவியை செய்யுங்கள்’ என வேண்டுகோள் விடுத்திருக்கிறார் காஜல் அகர்வால்.

Tags : Corona ,Kajal ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...