×

ஹீரோவுடன் யாஷிகா காதலா?

அதாகப்பட்டது மகா ஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம் சில திருத்தங்களுடன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர், உமாபதி. இவர் நடிகரும், இயக்குனருமான தம்பி ராமய்யாவின் மகன். தற்போது சிறுத்தை என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். இவரும், இதில் ஹீரோயினாக நடிக்கும் யாஷிகா ஆனந்தும் காதலிப்பதாக தகவல் பரவியுள்ளது. இதுகுறித்து தம்பி ராமய்யா கூறியதாவது: ஏற்கனவே மணியார் குடும்பம் படத்தில் ஒரு பாடலுக்கு யாஷிகா ஆடியிருந்தார்.

அவரும், உமாபதியும் நல்ல நண்பர்கள். சமீபத்தில் ஒரு ஓட்டலில் அவர்கள் குடும்பத்துடன் சாப்பிட்டு கொண்டிருந்ததை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர். அதை வைத்து இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியுள்ளது. இதில் உண்மை இல்லை. சிறுத்தை சிவா ரிலீசாகி வெற்றிபெற்ற பிறகு உமாபதியின் திருமணம் நடக்கும். அவருக்கு வீட்டில் பெண் பார்த்து வருகிறோம்.

Tags : Yashika ,hero ,
× RELATED நடிகர் மகனுடன் யாஷிகா காதல்?