×

ரிலீஸ் தள்ளிப்போகும் புதுப்படங்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 20) மற்றும் 27ம் தேதி வெளியாக இருந்த 10 படங்கள் வரை ரிலீசை தள்ளிப்போட்டுள்ளன. இதில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள், யோகி பாபு நடித்திருக்கும் காக்டெயில் படங்களும் அடங்கும். மார்ச் 31ம் தேதி வரை தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும்.

அதன் பிறகு சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்க அரசு யோசித்துள்ளது. ஆனாலும் ஏப்ரல் 2ம் தேதி ரிலீசாக இருந்த மாதவன், அனுஷ்கா நடித்த சைலன்ஸ், விஷ்ணு விஷால், ராணா நடித்துள்ள காடன் படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளிவைத்துள்ளன. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படமும் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.

Tags :
× RELATED சூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன்