×

ஹாலிவுட்டை எட்டிப்பிடித்த ஒரு குட்டி ஸ்டோரி’ பாடல்

ஹாலிவுட் ஸ்டார்களுக்கு பாலிவுட் ஸ்டார்களை தெரிந்ததுபோல் கோலிவுட் ஸ்டார்களை பற்றியும் தெரியுமா என்ற சந்தேகம் இருக்கிறது. நிச்சயம் தெரிந்திருக்கிறது என்பதை அவ்வப்போது அங்குள்ள ஸ்டார்கள் நிரூபித்து வருகின்றனர். கோலிவுட் பற்றியும், சென்னை தண்ணீர் பஞ்சம் பற்றியும் டைட்டானிக் ஹீரோ லியோனார்டோ டீகேப்ரியோ அடிக்கடி டிவிட்டரில் மெசேஜ் பகிர்ந்தார். சமீபத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் பாடி வெளியான,  ‘ஒரு குட்டி ஸ்டோரி’ பாடல் ஹாலிவுட்டை எட்டியிருக்கிறது.

தி பிக் பேங்க், பிளாக் லைட்னிங், அமெரிக்கன் சடன் போன்ற பல படங்களில் நடித்திருப்பதுடன், ஏ ரேஜ் இன் ஹர்டெம், டீப் கவர் போன்ற பல படங்களை இயக்கியவருமான பில் டியூக் விஜய்யின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு லைக் கொடுத்திருப்பதுடன் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதற்கு நன்றி தெரிவித்துள்ளார் லோகேஷ்.

Tags :
× RELATED நகைச்சுவை நடிகர் புலம்பல்