×

என்னை விட வடிவேலுதான் அழகு; மீம்ஸுக்கு ராஷ்மிகா ரிப்ளை

டியர் காம்ரேட் படத்தில் விஜய தேவரகொண்டாவுடன் நடித்த ராஷ்மிகா  தற்போது தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். ராஷ்மிகா வுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். அதேபோல் அவருக்கு வரும் சர்ச்சைகளும் அதிகம். கடந்த மாதத்தில் அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப் பட்டது பரபரப்பானது. அதுபற்றி கவலைப்படாமல் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமிலும், டிவிட்டரிலும் தனது புகைப் படங்களை அடிக்கடி வெளியிட்டு குஷிபடுத்தும் அவர் சமீபத்தில் வித்தியாச மான போட்டோ ஷூட் நடத்தினார்.

உஷ்... சத்தம் போடாதே என்பதுபோல் உதட்டின் மீது ஒரு விரலை வைத்து சைகை காட்டுவதுபோல் விதவிதமான பாவனைகள்செய்து அதனை ஒரு தொகுப்பாக டிவிட்டரில் வெளியிட்டார் ராஷ்மிகா. அவரது சேட்டையான இந்த புகைப்படங்களை நடிகர் வடிவேலு வெவ்வேறு படங்களில் காட்டும் முகபாவம், சைகைகளேடு ஒப்பிட்டு ரசிகர்கள் மீம்ஸ் பகிர்ந்திருக்கின்றனர். அதனை ரசித்த ராஷ்மிகா, ‘இந்த மீம்ஸில் என்னைவிட வடிவேலுதான் அழகு’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Vadivel ,Rashmika Ripley for Memes ,
× RELATED நடிகர் ரஜினிக்கு மீண்டும் சம்மன்...