புதுமுக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை; ஹனி ரோஸ் உடைக்கும் ரகசியம்

சிங்கம் புலி, மல்லுகட்டு, கந்தர்வன் என தமிழில் ஒரு சில படங்களில் நடித்த ஹனி ரோஸ் பின்னர் மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். திரைக்கு வந்து 15 ஆண்டுகளாகிறது. பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதுபற்றி அவர் பேட்டி அளித்தார். ஹனி ரோஸ் கூறியதாவது: சினிமாவில் நடிக்க வந்தபிறகுதான் நிறைய விஷயங்களை கற்கத் தொடங்கினேன். சினிமா என்பது இளம் பெண்களின் கனவு. ஆனால் சினிமாவில் நான் எதிர்பார்த்தபடி என்னால் பிரகாசிக்க முடியாத நிலை இருந்தது.

அதுவும் ஒருவகையில் நல்லாதாகவே இருந்தது. அப்போதுதான் நல்ல கதைகளை தேர்வு செய்யத் தொடங்கினேன். ‘திருவனந்தபுரம் லாட்ஜ்’ படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு நிறைய படங்கள் வந்தன. படிப்புக்கான நேரத்தை குறைத்துக்கொண்டு நடிப்புக்கு அதிக நேரம் ஒதுக்கினேன். சினிமாவில் காஸ்டிங் கவுச் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது.

அதை நான் எதிர்கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவருடைய அனுபவமும் வெவ்வேறாக இருக்கும். நான் பட வாய்ப்பில்லாமல் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் பாலியல் ரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அதிர்ஷ்டவசமாக என் பெற்றோர் எப்போதும் என்னுடன் இருந்ததால் அதில் சிக்கவில்லை. அதுபோன்ற பிரச்னையான படங்களை ஏற்காமல் தவிர்த்துவிட்டேன்.

அதன்பிறகு பிரச்னைகள் வரவில்லை. உடல் ரீதியாக என்னை யாரும் துன்புறுத்தியது இல்லை. ஆனால் திரையுலகில் இப்போதுள்ள நிலைமை என்ன என்பது எனக்கு தெரியவில்லை. புதுமுக நடிகைகள் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். பிரபலமான நடிகை என்பதால் எனக்கு அதுபோன்ற பிரச்னைகள் வருவதில்லை. அதேசமயம் திரையுலகில் தற்போது ஒரு பாசிடிவ் சூழல் நிலவுகிறது என்றார்.

Related Stories: