×

துப்பறிவாளன் 2வில் இருந்து இயக்குனர் மிஷ்கின் நீக்கம்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, விநய், ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், கே.பாக்யராஜ் நடிப்பில் 2017ல் ரிலீசான படம், துப்பறிவாளன். இது வெற்றி பெற்றதை தொடர்ந்து 2ம் பாகத்தை உருவாக்க மிஷ்கின், விஷால் முடிவு செய்தனர். அதன்படி விஷால் தயாரிப்பில் துப்பறிவாளன் 2ம் பாகம் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 40 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் விஷால், பிரசன்னா, ரகுமான், கவுதமி ஆகியோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்த நேரத்தில் விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. அதாவது, வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்துவதற்கான லொக்கேஷன்களை தேர்வு செய்வதற்காக அதிக நாட்கள் எடுத்துக்கொண்ட மிஷ்கின், 40 நாட்களுக்கான படப்பிடிப்பில் 33 நாட்கள் மட்டுமே நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சரியான திட்டமிடல் இல்லாததால், தினமும் படப்பிடிப்பில் விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சைக்கோ படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து, துப்பறிவாளன் 2 படத்தை இயக்க தனக்கு அதிக சம்பளம் கேட்டுள்ளார் மிஷ்கின்.  தவிர, படத்துக்கான பட்ஜெட்டையும் அதிகப்படுத்தி கேட்டிருக்கிறார். இதற்கு தயாரிப்பு தரப்பு மறுத்துவிட்டது. இதை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து மிஷ்கின் நீக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள காட்சிகளை விஷால் இயக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : Mishkin ,Detective 2 ,
× RELATED என் கனவை முன்கூட்டியே நனவாக்கிய மிஷ்கின்: இயக்குனர் விஷால் நெகிழ்ச்சி