×

நடிகையின் லக்கேஜ் மாறிப்போச்சு

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக புருஸ்லி படத்தில் நடித்தவர் கிரித்தி. இவர் சில தினங்களுக்கு முன் மும்பையில் இருந்து கோவாவிற்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அங்குபோய் சேர்ந்தபிறகு தனது லக்கேஜை அனுப்பி வைக்க கேட்டார். விமான ஊழியர்கள் அவரது லக்கேஷுக்கு பதிலாக வேறு யாருடைய லக்கேஜை அவரிடம் கொண்டு வந்து அளித்தனர். அதைக்கண்டுஅதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து விமான நிலைய நிர்வாகியிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காமல் தட்டிக்கழித்தார்கள். இதனால் உர்ரான கீர்த்தி இந்த சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கோபமாக மெசேஜ் வெளியிட்டார்.

அதைக்கண்டு ஷாக் ஆன விமான நிறுவனத்தினர் தகுந்த பதில் அனுப்பி வைத்ததுடன் உங்களுடைய லக்கேஜ் கோவாவில் இருப்பதாகவும் அதனை அனுப்பி வைக்கிறோம் என்றும் தெரிவித்ததுடன் தங்களது செயலுக்கு மன்னிப்பு கோரியிருந்தனர். ஆனாலும் கோபம் தீராத கிரித்தி,’பயணிகளிடம் எப்படி பேச வேண்டும் என்பதை முதலில் உங்கள் ஊழியர்களுக்கு கற்றுத்தாருங்கள்’ என்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Tags : Actress ,Luggage Change ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...