×

ஆப்ரிக்கா காட்டுக்குள் சென்ற மாளவிகா

ரஜினி நடித்த பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். மாளவிகாவுக்கு காட்டு பகுதிகளில் விலங்குகளின் வாழ்வில் புகைப்படங்கள் எடுப்பது பிடித்தமான விஷயம். சில தினங்களுக்கு முன் அவர் ஆப்ரிக்கா காட்டுப்பகுதிக்கு சென்று பிரத்யேகமான புகைப்படங்கள் எடுத்துவிட்டு காரில் திரும்பினார்.

மாலை வெயில் கார் கண்ணாடி வழியாக அவரது கண்களை தழுவியது. அக்காட்சியை தத்ரூபமாக படமாக்கியவர் அந்த அனுபவம் குறித்து பகிர்ந்தார்.
‘நீண்ட தூரத்திலிருந்து பயணித்து வரும் சூரியகதிர்கள் என்னை மஞ்சள் நிற ஒளிவெள் ளத்தில் நிரப்பியது. நான் என் கண்களை மூடிக்ெகாண்டேன். எனது இமைகள் மீது சூரியகதிர்களின் வெப்பத்தை உணர்ந்தேன்.

அது இதமாக இருந்தது’ என குறிப்பிட்டி ருந்தார். பின்னர் சேலைகள் உடுத்தி போட்டோ ஷூட் நடத்தினார். பார்வை ஊடுருவி செல்லும் கண்ணாடி இழைபோன்ற சேலை அணிந்து விதவிதமான போஸ்களில் புகைப்படங்கள் எடுத்தவர், ‘ஏதாவது சந்தேகமாக இருந்தால் சேலை அணிவதுதான் சிறந்தது’ என குறிப்பிட்டிருக்கிறார். சேலையில் அவரது கவர்ச்சி புகைப்படங்கள் நெட்டில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது.

Tags : Malvika ,Africa ,
× RELATED காட்டுமன்னார்கோவிலில் கொரோனா...